Idhayam Matrimony

அமெரிக்காவும் ஜப்பானும் கூட்டாக கடற்படை பயிற்சி

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

டோக்கியோ, வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜப்பானும், அமெரிக்காவும் கூட்டாக கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆசியப் பயணத்தின் போது, ‘‘அத்துமீறி ஏவுகணை சோதனை நடத்தி வரும் வட கொரியாவின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவும், ஜப்பானும் இணைந்து  கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க கடற்படை தரப்பில் கூறுகையில் ‘‘தொடர்ந்து 10 நாட்கள் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் 14,000 அமெரிக்க வீரர்கள் கலந்து கொள்கின்றன, அமெரிக்காவின் ரோனால்ட் ரீகன், சேதாம், மஸ்டின் ஆகிய போர்க் கப்பல்கள் பங்கேற்கின்றன’’ எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தென் கொரிய பகுதியில் அமெரிக்காவும் அந் நாட்டு படைகளும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் படைகள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
சர்வதேச விதிமுறைகளை மீறி ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 22 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்தது. அவற்றில் 2 ஏவுகணைகள் ஜப்பானின் வான்வெளியில் ஏவி சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் அணுகுண்டை விட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சோதனை செய்தது.மேலும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து