இலவச சட்ட உதவி விழிப்புணர்வு ஊர்வலம்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      சேலம்
slm 1

 

சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்ட்ரல் சட்டக் கல்லூரி, சேலம் இணைந்து 17.11.2017 அன்று இலவச சட்ட உதவி விழிப்புணர்வு ஊர்வலத்தை சட்ட விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடத்தினர். இந்த ஊர்வலமானது சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகம் துவங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை நடைபெற்றது.

விழிப்புணர்வு ஊர்வலம்

இலவச சட்ட உதவி பெற தகுதியுள்ள பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் இலவச சட்ட உதவி பெற்று நீதி பெறுவது அடிப்படை உரிமை என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இவ்ஊர்வலத்தின் நோக்கமாகும்.

இவ்ஊர்வலத்தில் முதலாமாண்டு மாணவ மாணவிகள் அனைவரும் தங்கள் கைகளில் இலவச சட்ட உதவி தொடர்பான பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர். முன்னதாக ஊர்வலத்தை சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதியுமான திரு.மோகன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் சேலம் மாவட்ட மக்கள் நீதிமன்ற தலைவரும் கூடுதல் மாவட்ட நீதிபதியுமான திருமதி.குணவதி மற்றும் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும் சார்பு நீதிபதியுமான திரு.இரவிச்சந்திரன் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலமானது மாவட்ட ஆட்சியரகத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரோகிணி ஆர்.பாஜிபாகரே அவர்களால் நிறைவு செய்து வைக்கப்பட்டது. மேலும் இந்த ஊர்வலத்தில் சேலம் மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் திரு.ஐயப்பமணி, கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இச்செய்தியை தங்கள் நாளிதழில் வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து