கன மழை காரணமாக குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குளிக்கத் தடை
தென்காசி, குற்றாலம், செங்கோட்டைம ற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கன மழைபெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் செல்லும் நிலை ஏற்பட்டது. கன மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின்அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறி பாய்ந்தது. இதன் காரணமாக அருவியில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.இதனால் ஏமாற்றம்அடைந்த ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் புலியருவி, சிற்றருவி சென்று குளித்தனர். ஐந்தருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.செங்கோட்டை குண்டாறு அணை, மேக்கரை அடவிநயினார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.