அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் முதல்வர் திறந்து வைத்தை மின்விநியோக துணை மின் நிலையம் : தலைமை கொறடா ராஜேந்திரன் குத்து விளக்கேற்றினார்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      அரியலூர்
Ariyalur 2017 11 21

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், பொய்யூர் கிராமத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற 110-விதியின்கீழ் அறிவிப்பின்படி, பொய்யூர் கிராமத்தில் மின்விநியோக துணை மின் நிலையம் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக்காட்சியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

 குத்து விளக்கேற்றினார்

 இதனையொட்டி, அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் முன்னிலையில் வகித்தார். இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடம் அரசு தலைமைக்கொறடா தெரிவித்ததாவது :- அரியலூர் ஒன்றியம், மல்லூர் ஊராட்சியில் ரூ.34.71 கோடி மதிப்பில் 7.13 ஹெக்டேர் பரப்பளவில் 230110 கி.வோ ஆட்டோ துணை மின்நிலையம் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணையின்படி 110விதியின்கீழ் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்படி தலைமைச்செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக்காட்சியின் வாயிலாக இன்று (21.10.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் முழுமைக்கும் சீரான மின்விநியோகம் வழங்கும் திட்டம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் துவக்கப்பட்டு, இத்துணைமின் நிலையத்திலிருந்து அரியலூர், கூத்தூர், சாத்தமங்கலம், நடுவலூர், ஜெயங்கொண்டம், கீழப்பழூர் ஆகிய 110 கே.வி துணை மின் நிலையங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்படுகிறது.

 நமது மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 230 கே.வி துணைமின் நிலையத்திலிருந்து நமது மாவட்டம் முழுமைக்கும் சீரான மின்விநியோகம் செய்யப்படுகிறது என அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சாமிதுரை, கணேசன், உதவிப்பொறியாளர் இராஜேந்திரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து