முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகத்தில் நீதிபதிகள் தலையிடக் கூடாது: மத்திய சட்டத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நிர்வாகம், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை விவகாரங்களில் நீதிபதிகள் தலையிடக் கூடாது’’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘தனிமனித உரிமைகளை (அரசு) ஆக்கிரமித்தால், அந்த வேளையில் மக்கள் பக்கம்தான் நீதித்துறை நிற்கும். நீதித்துறை தலையிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறினார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசினார். அவர் பேசும்போது, ‘‘அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிடலாம். ஆனால், நிர்வாகத்தைத் தன் கைகளில் எடுத்துக் கூடாது’’ என்றார்.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்று தொடர்ந்து நடந்து நிகழ்ச்சியில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, ‘‘நீதித்துறைக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல்தான் நீதித்துறைக்கு நேர்மையும் முக்கியம். சிக்கலைத் தவிர்க்க நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்ற சட்டப்பேரவைக்கு இடையில் சமநிலையை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து