தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 23வது ஆண்டு விழா

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      திருநெல்வேலி
mkvk annual day

தென்காசி எம்.கே.வி.கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 23வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

ஆண்டு விழா

விழாவிற்கு நம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆசிரியை மகாலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். கடந்த கல்வி ஆண்டின் நிகழ்ச்சிகளை பள்ளி முதல்வர் அந்தோணிபால்ராஜ் ஆண்டறிக்கையாக வாசித்தார். ஆசிரியை ஜோசப்பின் ஸ்வீட்டி சிறப்புவிருந்தினர் மாவட்ட ஆட்சியரை கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். 2016 – 2017 கல்வி ஆண்டில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். தனது சிறப்புரையில் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், கேள்விகள் கேட்கும், பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும, மற்றும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கீழ்படிந்து வளரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கலெக்டர் அவர்களுக்கு பள்ளி தாளாளர் பாலமுருகன் நினைவுப்பரிசு வழங்கினர். பின்னர் கலைநிகழ்ச்சிகள் வரவேற்புரை நடனத்துடன் ஆரம்பமானது. மழலையர்களின் நடனம், நாட்டிய நாடகம் , ஆங்கில நாடகம், கிராமத்து நடனம், மேற்கத்திய நடனம் மற்றும் மைம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை கனகசுப்புலட்சுமி நன்றியுரை ஆற்றினார். விழா தேசீய கீதத்துடன் நிறைவுபெற்றது. விழாவிற்கு பெற்றோர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து