ஆரணியில் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற அறிவிப்பால் பரபரப்பு.

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      வேலூர்
a DSP

ஆரணியில் தொல்.திருமாவளவனை கண்டித்து செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் என்று இந்து மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்றும், இந்து கடவுள்களையும் இழிவாக பேசிய விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து செவ்வாய்கிழமை ஆரணி மணிகூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் இந்துமக்கள் இயக்கம் சார்பில் அனுமதி கோரினர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

 

ஆர்ப்பாட்டம்

 

இந்நிலையில் ஆரணி மணிகூண்டு அருகில் தொல்.திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் ஆரணி டிஎஸ்பி ஜெரினாபேகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீஸôர் சம்பவ இடத்தில் குவிந்தனர். தகவலறிந்த விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ம.கு.பாஸ்கரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆரணி மணிகூண்டு அருகில் வரத்தொடங்கினர். அவர்களை இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்தினார். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை பொதுமக்களாக இருந்து பார்க்க வந்தோம் என்றும், பிரச்சினை செய்ய வரவில்லை என்றும் கூறினர்.

விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செவ்வாய்கிழமை காலை 10 மணி ஆர்ப்பாட்டம் என்பதை பிற்பகல் 12 மணிக்கு செய்யப்போவதாக இந்துமக்கள் இயக்கம் சார்பில் தெரிவித்தனர். இதனால் மேலும் பரபரப்பு அதிகமானது.பின்னர் 12 மணி அளவில் இந்துமக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ரத்து செய்ததாக அறிவித்தனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் அங்கு குவிந்த விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து