குரும்பாபேட் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: புதிய போர்வெல் அமைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவு

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      புதுச்சேரி

புதுச்சேரி குரும்பாபேட் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் நடவடிக்கை

ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் மேடான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சரியான அளவு குடிநீர் வருவதில்லை என தொகுதி எம்எல்ஏவான தீப்பாய்ந்தானிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தீப்பாய்ந்தான் எம்எல்ஏ இது குறித்து முதல்வர் நாராயணசாமியிட்ம் தெரிவித்தார். இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள குரும்பாபேட் மற்றும் ராகவேந்திரா நகர், அமைதி நகர் பகுதிகளை நேற்று காலை தீப்பாய்ந்தான் எம்எல்ஏவுடன் சென்று முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மேடான பகுதிகளில் புதிய போர்வெல் அமைத்து பெரிய மின்மோட்டார் உதவியுடன் குடிநீர் சப்ளை செய்யும் படி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து