பொன்னேரி தடப்பெரும்பாக்கத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த கழிவு நீர் தேக்கம் தடுப்பு : அதிகாரிகள் நடவடிக்கை

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      சென்னை
Pooneri 2017 12 16

பொன்னேரி வட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தடப்பெரும்பாக்கத்தில் மழைக்காலங்களில் தேங்கும் நிலத்தடி நீரோடு கழிவு நீர் தேங்கும் பிரச்சனை இருந்து வந்தது.தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையின் போது இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

நிரந்தர தீர்வு

மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி,கோட்டாட்சியர் முத்துசாமி,வட்டாட்சியர் சுமதி,வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் மழைநீர் வடிந்தவுடன் இதற்க்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு அப்பகுதி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரினை கொண்டுவரும் கால்வாயினை அடைத்து தற்காலிகமாக கழிவு நீர் தேங்காதவண்ணம் பராமரிப்பு செய்வதென்றும்,அதுவரை பொதுமக்கள் தங்கள் கழிப்பறை கழிவுநீரை கழிவு நீர் ஊர்தியினை பயன்படுத்தி சுத்தப்படுத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மீஞ்சூர் வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு,துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் மற்றும் ஊராட்சி செயலர்கள் ராஜேஷ்கண்ணன்,முத்து,சூர்யா உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்பகுதி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரினை கொண்டுவரும் கால்வாயினை அடைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து