பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்: தி.மலை கலெக்டர் கந்தசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      திருவண்ணாமலை
photo07

 

பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவ மாணவிகள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.

வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமிற்கு வந்த அனைவரையும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் க.விஜயா வரவேற்று பேசினார். மாவட்ட தொழில் மைய மேலாளர் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான இளைஞர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கி பேசுகையில், வேலைவாய்ப்புக்கான போட்டிகள் அதிகரித்துள்ளன. கல்வி தகுதி மட்டுமின்றி தனி திறன் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்புகளை பெற முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. எனவே அதற்கு தகுந்தபடி இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், அரசு துறை பணிகளுக்கு போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

எனவே படிக்கும் காலங்களிலேயே பொது அறிவு நூல்களை படித்து மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு தயாராவது அவசியம். பணியில் சேர்ந்த பிறகும் தொடர்ந்து தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் சிறப்புடன் செயல்பட முடியும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு விரும்பிய வேலை கிடைக்கவில்லை என காத்திருக்கக்கூடாது, ஏதேனும் ஒரு பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே விரும்பிய துறையில் பணியில் சேர தகுதியை மேம்படுத்திக் கொண்டு முயற்சிக்க வேண்டும், கல்வி இல்லாமல் எதிர்காலம் இல்லை. நம்மை தேடி வருவதில்லை வேலையை தேடி நாம்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தகுதியுள்ள இளைஞர்களை தேடி வந்திருக்கின்றன.

எனவே இதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். முகாமில் 23 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. கல்வி தகுதி நேர்காணல் பணிமுன்அனுபவம் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடந்தன. அதில் பங்கேற்ற 982 இளைஞர்களில் 320 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து