முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி காட்டுவது வரம்பு மீறிய செயல் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தமிழக கவர்னருக்கு எதிராக எதிர்கட்சிகள் கறுப்பு கொடி காட்டுவது தவறான முன்னுதாரணம். எதிர்கட்சிகளின் வரம்பு மீறிய செயல் என தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்திரரராஜன் தெரிவித்தார்.

பேட்டி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இடிந்துவிழுந்த கிரி பிரகார மண்டபத்தை தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்செந்தூர் முருகனை வணங்கிவிட்டு இடிந்த மண்டபத்தை பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இடிந்த சமயம் நல்லவேளையாக அதிகமான கூட்டம் இங்கு இல்லை. ஐயப்ப பக்தர்கள் வருகின்ற இடம். இதனால் அந்த சமயம் பல உயிரிழிப்புகள் தடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு பேச்சியம்மாள் என்ற ஏழை பெண் பலியாகி இருக்கிறார். .   பலியான பெண் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்ற இயற்கை பேரிடரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்குவது வழக்கம். அதே போல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். பெண்ணின் மகன், மகளுக்கு அறநிலையத்துறையில் நிரந்தர வருமானம் வரும் வகையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இது எச்சரிக்கை மணி. பல லட்சம் பேர் வந்து செல்ல கூடிய கோயிலில் பல தனியார்கள் மண்டபத்தை கட்டி கொடுக்க முன்வருகின்றனர்.  இக்கோயில் பலவீனமான பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கருப்பு கொடி

கடலூர், சேலத்தில் ஆய்வுக்கு சென்று தமிழக கவர்னருக்கு எதிர்கட்சியினர் கறுப்பு காட்டி வருகின்றனர். இது தவறான முன்னுதாரணம். எதிர்கட்சியினரின் வரம்பு மீறிய செயல் இதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக கவர்னர் என்ன ஆணையா பிறப்பித்திருக்கிறார். இது குறித்து அரசாங்கமே ஒன்றும் சொல்லவில்லை. எதிர்மறையா ஒன்று அவர் செயல்படவில்லை. நேர்மறையாக செயல்படுவதில் என்ன தவறு உள்ளது?. மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் தூய்மை பாரதம் குறித்து ஆய்வு செய்த பொது கழிப்பறை திட்டத்தில் கழிப்பறை உள்ளதா ஆய்வு செய்தால் குளிக்க சென்ற பெண்ணை பார்க்க சென்றார் என தவறாக கூறுகின். இது எதிர்கட்சியினரின் அநாகரீக செயல். நல்லது செய்பவர்களுக்கு நல்லதே நடக்கும். அரசு பதவியில் அதுவும் கவர்னராக இருப்பவர் சும்மா இருக்க முடியும்.  பிறகு மக்கள் பிரச்சனை குறித்து ஸ்டாலின் போன்றவர்கள் ஏன் மனு கொடுக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்ல அசாமில் புயல் பாதித்த போது அங்கும் கவர்னர் பணியாற்றி இருக்கிறார். பா.ஜ.க. ஆளும் மாநிலம் ஆளாத மாநிலம் என்று இல்லாமல் மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என நோக்கத்தோடு பணியாற்றி வருகிறார் என்றார்.பேட்டியின் போது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றிய பொது செயலாளர் சுந்தர், ஒன்றிய துணை தலைவர்கள் தங்கசே ஆதித்தன், திருநாவுக்கரசு, ஜனா, நகர பொது செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி துணை தலைவி செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து