தருமபுரி அருகே பயங்கரம் சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      தர்மபுரி

தருமபுரி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய சித்தியே கழுத்தை நெறித்து கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆத்திரத்தில் கொலை

தருமபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் அருகே கெங்கன் கொட்டாய்பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகன் சின்னசாமி (35). கூலி தொழிலாளி இவருடைய மனைவி ஜான்சிராணி (30) இவர்களது மகள் சுமித்ரா (4). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். பிரிந்து அதேபகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த வசந்தா (27) என்ற பெண், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அவர் மீது ஆசைப்பட்ட சின்னசாமி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தந்தை சித்தி பராமரிப்பில் சிறுமி சுமித்ரா வளர்ந்து வந்தார். கடந்த 16-ம் தேதி இரவில் சிறுமிக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி, வசந்தாவும், சின்னசாமியும் தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுமித்ரா உயிரிழந்தார். சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி முதல் மனைவி ஜான்சிராணி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். நல்ல முறையில் இருக்க சுமித்ரா திடீரென உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மதிகோன்பாளையம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

 

போலீசார் விசாரணை

அதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தது தெரியவந்தது. இதர உறுப்புகள் சேலத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் சிறுமியை கொன்றது பரிசோதனையில் தெரியவந்தது. தங்களுக்கு சுமித்ரா இடையூறாக இருப்பதாக நினைத்து வசந்தா, சின்னசாமி இருவரும் குழந்தையை கொன்றிருக்கலாம் என உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் நேற்று அதை கோலை வழக்காக மாற்றினர்.சிறுமி மரணம் தொடர்பாக போலீசார் சின்னசாமி, வசந்தாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அப்போது சுமித்ராவை கழுத்தை நெரித்து கொன்றதை வசந்தா ஒப்புக்கொண்டார். அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

வாக்கு மூலம்

அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீஸ்சார் கூறியதாவது; சிறுமி சுமித்ரா எப்போதும் 2-வது மனைவி வந்தாவுடன் தான் இருப்பார். இதனிடையே, சின்னசாமியின் தந்தையுமான சின்னதுரையிடம் சொத்துக்களை என் பெயருக்கு மாற்றி எழுத தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சின்னதுரை மறுத்ததுடன் சொத்துக்கள் எல்லாம் முதல் மனைவிக்கு பிறந்த சுமித்ராவுக்கு தான் போய் சேரும். இதில் நீ பிரச்சனை செய்யக்கூடாது என வந்தாவை சின்னதுரை கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வசந்தா தூங்கிக்கொண்டிருந்த சுமித்ராவை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் இருக்க மர்ம காய்ச்சல் ஏற்பட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மூக்கு, வாயில் நுரைதள்ளிய நிலையில் சிறுமி உயிரிழந்ததும், பிரேத பரிசோதனையில் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதும் தெரியந்தது. வசந்தா பீதியில் இருந்தார். நாங்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த கொலையில் அவருடைய கணவருக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கிறோம் என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து