தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      தர்மபுரி
tmp 2

 

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் 23.12.2017 சனிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மாணவர்களின் இறை நடனத்துடன் துவங்கிய இவ்விழாவில் இல்லத்தந்தையும் முதல்வருமாகிய அருட்திரு. முனைவர். சி.எம் வர்கீஸ் அவர்களும், உதவி இல்லத்தந்தை அருட்திரு. மரிய லூயிஸ் அவர்களும், துணை முதல்வர். அருட்திரு. ராபர்ட் ரமேஷ் பாபு, பொருளாளர். அருட்திரு. பாரதி பெர்னாட்ஷா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிறிஸ்துமஸ் விழா

அருட்திரு. சகோதரி. ஜெயமேரி தலைமை ஆசிரியர் அமலா துவக்கப்பள்ளி தருமபுரி அவர்களும், திருமதி. தமிழ்ச்செல்வி தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி பந்தரஹள்ளி அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கிறிஸ்துமஸ் நட்சிறப்பு உரை நிகழ்த்தியதுடன், மாணவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள்.

பேராசிரிய பெருமக்கள், மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, மாணவ மாணவியரின் அழகிய கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதியியல் துறைத் தலைவர் பேரா. அசோகன் அவர்கள் தம் துறைப் பேராசிரியர்களுடன் இணைந்து செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து