நெல்லையில் செய்யது பீடி கம்பெனி முற்றுகை: 250 பேர் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      திருநெல்வேலி

பீடித் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காத செய்யது பீடி கம்பெனியைக் கண்டித்து பீடித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) முற்றுகை போராட்டம் நடத்தியது.

முற்றுகை போராட்டம்

நெல்லையில் உள்ள  செய்யது பீடி நிர்வாகம்கடந்த 3 வருடமாக வழங்கி வந்த பணிக்கொடையை திடீரென கடந்த 6 மாதமாக நிறுத்தி விட்டது. இந்த பணிகொடையின் பணம் மட்டுமே ரூ.1கோடி இருக்கும் எனவே கம்பெனி நிர்வாகம் பீடி தொழிலாளர்க்ளுக்கு  சட்டப்படி வழங்க வேண்டியு பணப்பயன்கள் மற்றும் பணிக்கொடைகளை உடனடியாக வழங்கக் கோரி பாளை வண்ணாரப்பேட்டை  செய்யது பீடிக் கம்பெனி அலுவலகத்தை  சி.ஐ.டி.யு மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) முற்றுகையிட்டது.போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பீடித் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜாங்கம் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். போராட்டத்தில் சங்க மாவட்ட பொருளாளர்  ஆரியமுல்லை, நிர்வாகிகள் சுடலைமணி, சுப்புலெட்சுமி, பத்மா, இசக்கிராஜன், மாரிசெல்வம், சரசுவதி , அருணாச் சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பாளை தொழிலாளர் நல துறை  துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல துறை அதிகாரிகள்,சி.ஐ.டி.யு பீடி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ,செய்யது பீடி கம்பெனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் , பேச்சுவார்த்தையில் சம்மந்தப்பட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் தினசரி வழக்கை நடத்தி 3 மாதத்திற்குள் இந்த வழக்கிற்கான தீர்ப்பை அறிவிப்பது  இன்றிலிருந்து 26-12-2017 முதல் தினசரி 50 வழக்குகள் நடத்துவது அதற்கான அனைத்து ஆவணங்களையும் பீடி கமெபெனி நிர்வாகம் தருவது என்ற பேச்சுவார்த்தையில்  முடிவெடுக்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து