முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடிக்கு 3 பாக்.வீரர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

இஸ்லமாபாத் : பாகிஸ்தானின் அத்துமீறிய துப்பாக்கிச்சூடுக்கு இந்திய ராணுவம் அளித்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் பலியாகினர்.

தக்க பதிலடி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. அந்த வகையில் நேற்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தரப்புக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

3 பேர் பலி

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ருக் சக்ரி செக்டாரில், இரு தரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான்  ஊடகங்கள் இந்த செய்தியை தெரிவித்துள்ளன. மேலும், இந்திய ராணுவம் தான் முதலில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்று கிழமை பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ மேஜர் உட்பட 4 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நடைபெற்ற சில தினங்களில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

பதிலடி தொடரும்

இந்த சம்பவத்தினால் எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது, எல்லை முழுவதும் பாதுகாப்பு படை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவ்லாகோட் செக்டாரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது  பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் பேசுகையில், “பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியாவை பொறுமையை சோதிக்க முயற்சி செய்தால் அவர்கள் கடுமையான விளைவை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும். அவர்கள் நம்முடைய ராணுவ வீரர்கள் 4 பேரது உயிரை எடுத்ததற்கு பதிலடியை கொடுத்து உள்ளோம், இதுபோன்ற பதிலடி தொடரும்,” என கூறிஉள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து