கரூரில் ஐந்து பிரிவுகளில் இயங்கும் பேருந்துகள் 90 சதவீதம் இயக்கப்படுகிறது 100 சதவீதம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தகவல்

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      கரூர்
pro karur

போக்குவரத்துத்துறை ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக பேருந்துகளை இயக்கிட மாவட்ட கலெக்டர்கு.கோவிந்தராஜ். நடவடிக்கை மேற்கொண்டு பேருந்துகள் கரூர் மாவட்டத்தில் 90 சதவீதம் இயக்கப்படுவதை திருமாநிலையூர் பணிமனை மற்றும் கரூர் பேருந்து நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவதுகரூர் மாவட்டத்தில் கரூர் 1-ஆம் நிலையில் மொத்தம் 68 பேருந்துகள் இயங்கிவந்தன அதில் இன்று 63 பேருந்துகளும், கரூர் 2-ஆம் நிலையில் மொத்தம் 69 பேருந்துகள் இயங்கிவந்தன அதில் இன்று 56 பேருந்துகளும், குளித்தலையில் மொத்தம் 43 பேருந்துகள் இயங்கிவந்தன அதில் இன்று 35 பேருந்துகளும், அரவக்குறிச்சியில் மொத்தம் 29 பேருந்துகள் இயங்கிவந்தன

அதில் இன்று 29 பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள்மொத்தம் 38 பேருந்துகள் இயங்கிவந்தன அதில் நேற்று 33 பேருந்துகளும், மொத்தம் 247 பேருந்துகளில் 221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதிருக்க 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகள் தற்காலிக ஒட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கொண்டு இயக்கப்படவுள்ளது.

அவர்களின் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய சான்றுகள் வட்டார போக்குவரத்து அலுவலரால் சரிபார்க்கபட்டு அவர்களுக்கு முறையாக பேருந்துகள் இயக்குவது குறித்தும் பயணிகளிடம் அன்பாக நடந்துகொள்வது குறித்தும் ஆலோசனை மற்றும் பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலவலர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், கோட்ட துணை மேலாளர் ஜீலியட் அற்புதராஜன் கிளை மேலாளர்கள் இராஜேந்திரன், செந்தில்குமார், இரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து