மாதா அமிர்தானந்தமயி அம்மா அவர்கள் வேலூர் வருகைதர உள்ளார்

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      வேலூர்

மாதா அமிர்தானந்தமயி அம்மா அவர்கள் வேலூர் வருகை தருவதாக சேவா சமிதி அரக்கட்டளை உறுப்பினர் கமல்நாதன், செய்தியாளர் கூறியதாவது, வேலூர் மாவட்டத்திற்கு மாதா அமிர்தானந்தமயி அம்மா அவர்கள் வருகை தருகின்றார். உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் அம்மா என்று அன்புடன் போற்றப்படும் சத்குரு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் வரும் 21.1.2018, ஞாயிற்றுக்கிழமை அன்று வேலூர் நகரத்திற்கு விஜயம் செய்யவிருக்கிறார்கள். அம்மா அவர்கள் தனது தூய அன்பினாலும், தாய்மை அரவணைப்பினாலும் மக்களின் மனதில் ஆக்கபூர்வமான மாற்றத்தையும், ஆன்மிக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அம்மாவின் தரிசனம் மக்களின் துன்பச் சுமையைக் குறைத்து நம்பிக்கையும், பக்தியையும் தோற்றுவிக்கிறது. 

தியானம், தரிசனம்

கடந்த 40 வருடங்களாக அம்மா அவர்கள் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி உலகமெங்கும் சுமார் 4 கோடி மக்களுக்கு நேரடியாக தந்துள்ளார்கள். மேலும் அம்மாவின் மாபெரும் சேவைகளைப் பாராடி, ஐக்கிய நாடுகள் சபை, அதன் சேவைகளுக்கு உறுதுணையாக மாதா அமிர்தானந்தமயி மடத்தை சர்வதேச தொண்டு நிறுவனமாக அங்கிகரித்துள்ளது. வரும் 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலூரில் ஒரு மாபெரும் பொது நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது அம்மாவின் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடனும். உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கலந்து கொண்டு அம்மாவின் ஆசிபெற அன்புடன் அழைக்கின்றோம். இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடன் இந்து முன்னனி மாவட்ட தலைவர் மகேஷ் மற்றும் டாக்டர்.முத்தரசன், டாக்டர்.சந்தோஷ் மற்றும் சிவா ஆகியோர் உடனிருந்தனர்.


 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து