முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி: அமைச்சர் கே.பி.அன்பழகன் துவங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      தர்மபுரி

 

தருமபுரி மாவட்டம் பாலக்;கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமை வகித்தார்.

மாணவர் விடுதி

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

பாலக்கோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) 2017-18 நடப்பு கல்வி ஆண்டில் தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. கிராம புறங்களிலிருந்து வருகை தரும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் விடுதி வசதி வேண்டும் என்ற கோரிக்கையினை அரசு ஏற்று மாணவர் விடுதி துவங்கப்பட்டுள்ளது. பாலக்கோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம். ஆங்கில வழி, பி.எஸ்.சி. கணிதம் ஆங்கில வழி, பி.எஸ்.சி. கணினி அறிவியல் ஆங்கில வழி என 5 இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். மேலும் கூடுதலாக 3 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு மொத்தம் 8 பாடப்பிரிவுகளில் 518 மாணவ, மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்தும் பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது ரூ.19,000ஃ- வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2,000- மட்டும் கட்டணமாக பெறப்படுகிறது. தற்போது பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்தும் பாலிடெக்னிக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் ரூ.2,000ஃ- மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானதாகும்.

மேலும் பாலக்கோட்டில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய கட்டடம் கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. ஒரே ஆண்டில் கல்லூரி துவங்கப்பட்டு மாணவர்களுக்கு தங்கும் விடுதியும் கல்லூரி கட்டுவதற்கு இடமும், நிதியும் வழங்கிய தமிழக அரசிற்கும் முதலமைச்சருக்கும் பாலக்கோடு தொகுதி மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நடவடிக்கை

 

நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 5 விடுதிகள் தொடங்க அரசு அறிவித்துள்ளது. இதில் பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் 1 தங்கும் விடுதி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.33.59 இலட்சம் நிதி ஒதுக்கீடு 100 மாணவர்கள் தங்கி கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய விடுதி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் விடுதி கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த அரிய வாய்ப்பினை பாலக்கோடு பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி உயர்கல்வியை கற்று வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பேசினார்.

இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமிர்பாஷா, பாலக்கோடு சர்க்கரை ஆலைத்தலைவர் கே.வி.அரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், தனபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர், கூட்டுறவு சங்கத்தலைவர் வீரமணி, வட்டாட்சியர் அருண்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து