திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
thiruchenthur temple masi thiruvizhaa

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா நான்காவது நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடந்தது. 

மாசி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் மாசி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் நான்காவது நாளான நேற்றுகாலை நேற்றுகாலை 7 மணிக்கு சிவன் கோயிலிருந்து  சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடந்தது. நேற்றுமாலை 6.30 மணிக்கு சிவன் கோயிலிருந்து சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடந்தது.  இதில திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று(24ம் தேதி)காலை 7 மணிக்கு சுவாமி, அம்மன் வீதி உலா நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் வைத்து சுவாமி, அம்மனுக்க குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. அப்போது கீரதவீதி சந்திப்பில் எதிர்திசையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. யில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்துள்ளனர்.  

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து