முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்கோட்டில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு நலதிட்ட முகாம்: கலெக்டர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      தர்மபுரி
Image Unavailable

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தர்மபுரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த கண்காட்சிகளும் நிதி உதவிகளும் நடைபெற்றன. இவ்விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரவி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.

விழிப்புணர்வு முகாம்

மேலும் தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மணி, தர்மபுரி மாவட்ட சார்பு நீதிபதி சண்முகவேல், பாலக்கோடு சார்பு நீதிபதி சையத் பர்கத்துல்லா, அரூர் சார்பு நீதிபதி நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் அனைத்து துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அதுசமயம் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சிகள் துறை, ஆவின் சிறப்பு பாலகம், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை, தொழில் வணிகத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, வங்கித் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, வட்டார போக்குவரத்துத் துறை ஆகிய துறையின் சார்பாக தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு மக்களுக்கு அந்தந்த துறையின் திட்டங்கள் அவற்றை பெறுவது எப்படி என்பது குறித்து பொது மக்களுக்கு துறையின் அதிகாரிகள் எடுத்துக்கூறி செயல் விளக்கம் செய்து காட்டினர். இதனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரவி, மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய குழு மேற்பார்வை செய்தனர்.

இவ்விழாவில் ஒரு கோடியே 78 இலட்சத்து 83 ஆயிரத்து 247 ரூபாய் நலதிட்ட உதவிகளை முதன்மை அமர்வு நீதிபதி ரவி வழங்கினார். இருளர் பழங்குடியினர் சான்று 119 பயனாளிகளுக்கும், சிறு விவசாயி சான்று 64 பயனாளிகளுக்கும், இறப்பு சான்று 22 பயனாளிகளுக்கும், பிறப்பு சான்று 28 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 50 பயனாளிகளுக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர் சான்று 13 பயனாளிகளுக்கும், அரசு பணியில் எவரும் இல்லை சான்று 2 பயனாளிகளுக்கும், விதவை சான்று 23 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாறுதல் 55 பயனாளிகளுக்கும், வறிய நிலைச் சான்று 2 பயனாளிகளுக்கும், மறுமணம் செய்துகொள்ளவில்லை சான்று 4 பயனாளிகளுக்கும், அசையும் அசையா சொத்து சான்று 3 பயனாளிகளுக்கும், மாற்றுத் திறனாளி உதவித் தொகை 11 பயனாளிகளுக்கும், திருமண உதவித் தொகை 20 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் உதவித் தொகை 10 பயனாளிகளுக்கும், உணவு பாதுகாப்பு உரிமம் 64 பயனாளிகளுக்கும், உதவி தொடக்கக் கல்வித் துறை நலதிட்டங்கள் 13 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறை சார்பாக 19 பயனாளிகளுக்கும், வேளாண்மைத் துறை 61 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை 40 பயனாளிகளுக்கும், வேலைவாய்ப்புத் துறை 21 பயனாளிகளுக்கும், வட்ட வழங்கல் அலுவலர் 128 பயனாளிகளுக்கும், வட்டார போக்குவரத்து அலுவலர் 400 பயனாளிகளுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 82 பயனாளிகளுக்கும், பாலக்கோடு பாரத ஸ்டேட் வங்கி 5 பயனாளிகளுக்கும் மொத்தம் 1259 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து