முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா மார்ச் 29- ல் தொடக்கம்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      சிவகங்கை
Image Unavailable

  சிவகங்கை.- சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
     தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா தொடங்கி நடைபெறும். இந்தாண்டு திருவிழாவையொட்டி, மார்ச் 29 ஆம் தேதி காலை நவசக்தி ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. இரவு 10.35 மணிக்கு அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
     தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவின்போது, தினமும் இரவு உற்ஸவர் முத்துமாரியம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். அதன்பின்னர், அம்மன் சிம்மம், காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக பொங்கல் வைபவம் ஏப்ரல் 5 ஆம் தேதியும், தேரோட்டம் 6 ஆம் தேதி இரவும், பால்குடம் 7 ஆம் தேதியும், அன்றிரவு பூப்பல்லக்கில் அம்மன் பவனி வருதலும் நடைபெறுகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்த்தவாரி உற்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இத் திருவிழா தொடங்கவுள்ளதை முன்னிட்டு, வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. பங்குனி மாதம் பிறந்ததுமுதல், தாயமங்கலம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கிவிட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர் மு. வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து