வீடியோ: சங்ககிரியில் சோமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்

சனிக்கிழமை, 31 மார்ச் 2018      ஆன்மிகம்
Sangagiri

சங்ககிரியில் சோமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சோமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மேடையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சோமேஸ்வரரும் சௌந்திரநாயகி அன்னையும் மணமக்களாக வீற்றிருக்க பக்தர்கள் சீர்வரிசைகளை வடக்கு ரத வீதி, அக்ரஹார வீதி, கடைவீதி, தெற்கு ரத வீதி மற்றும் மேற்கு ரத வீதி வழியாக மேளதாழத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து அளித்தனர். அதன் பிறகு மந்திரங்கள் ஓத, வாண வெடி முழங்க அக்னி சாட்சியாக சோமேஸ்வரர் சௌந்தரநாயகி திருக்கல்யாண மாங்கல்ய தாரண வைபவமும், மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெற்றது. அதன் பிறகு கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து