எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பென்னாகரம், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் வறண்டும், ஆற்றில் ஆங்காங்கே நீர் குட்டைகள் தோன்றி பாறை திட்டுக்களாக காணப்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடி வரை சரிந்தது. இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாகவும், 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


