Idhayam Matrimony

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்

வியாழக்கிழமை, 17 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

கர்நாடகா தேர்தல் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான மற்றும் நிச்சயமற்ற சூழல் நிலவியது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் பா.ஜ.க அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. அதனால் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரையும் உயர்ந்தன. ஆனால் மதியத்துக்கு பிறகு பா.ஜ.கவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகள் இல்லாததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. தவிர திங்கள் கிழமை வெளியான பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய குறியீடுகளும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை தரவில்லை.

துறை வாரியாக பார்க்கும்போது ஆட்டோமொபைல், ஹெல்த்கேர் மற்றும் கேபிடல் குட்ஸ் ஆகிய துறைகள் சரிந்து முடிந்தன. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து 35543 புள்ளியில் முடிந்தன. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 35993 புள்ளி வரை சென்செக்ஸ் சென்றது. குறைந்த பட்சம் 35497 வரை சரிந்தது. நிப்டி 4 புள்ளிகள் சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல், பவர் கிரிட், இண்டஸ்இந்த் வங்கி, டிசிஎஸ் ஆகியவை உயர்ந்தன. மாறாக டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, கோல் இந்தியா மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து