பெரியகுளம் ஸ்ரீபாலசுப்பிரமணிய திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா துணை முதல்வர் கலந்து கொண்டார்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      தேனி
ops  news 3

தேனி-பெரியகுளம் ஸ்ரீபாலசுப்பிரமணிய திருக்கோவிலில் மொட்டை கோபுரமாக இருந்தது. அங்கு 7 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைக்கவும், கோவில் உட்புறம் சுமார் 50 ஆயிரம் சதுர அடிக்கு கற்கள் பதிக்கவும், கோவில் தூண்கள் மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பவும், வராகநதிக்கரையில் படிகளை மராமத்து பணிகள் உள்ளிட்ட திருப்பணிகளுக்கான வேலைகள் கடந்த 2013ல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி, சண்முகர் உள்ளிட்ட சுவாமி சன்னதிகளுக்கு முன்பு கொடிமரம் நடும் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரும் 25ம் தேதி காலை 9 மணி முதல் 9.20 க்குள் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இக்கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார். இவ்விழாவில் சசிதரன், சிதம்பரசூரியவேலு உள்ளிட்ட திருப்பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து