முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலம் தேக்கடியில் நடந்த ஓருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் முறைப்படி கண்ணகி கோவில் சீரமைக்க முடிவு

புதன்கிழமை, 18 ஜூலை 2018      தேனி
Image Unavailable

கம்பம்,- கேரளா மாநிலம் தேக்கடியில் நடந்த தமிழக&கேரள ஓருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழ கலச்சார முறைப்படி கண்ணகி கோவிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கல தேவி கண்ணகி கோவில் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த இக்கோவில் பராமாரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் உள்ளது.இதனை சீரமைக்க கடந்த 1991 ஆம் ஆண்டு தொல்லியல் துறை முடிவு செய்தது.ஆனால் பல ஆண்டாகியும் நடவடிக்கை இல்லை.இதனை எதிர்த்து மங்கல தேவி கண்ணகி அறக்கட்டளையினர் கேரள உயர் நீதி மன்றத்தில் 2014 ல் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கின் எதிரொலியாக தொல்லியல் துறை சார்பில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது.அதன் பின்பும் சீரமைக்க முன் வரததால் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சீரமைக்க கேரள அரசு உத்தரவிட்டது.இதற்காக கண்ணகி கோவில் ஓருங்கிணைப்பு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.இக்குழுவின் தலைவராக தமிழக கூட்டுறவுத் துறையின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன்,செயலாளராக திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்,பொருளாராக ராஜ்கணேசன் தேர்வு செய்யப்பட்டனர்.இக்குழுவின் முதல் கூட்டம் கேரளா மாநிலம் தேக்கடியில் நடந்தது.கோவில் சீரமைப்பு பணிக்காக முதற் கட்டமாக தேவசம் போர்டு சார்பில் ரூ 3 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோவிலை தமிழ் முறைப்படி சீரமைப்பது சித்ரா பவுர்மணி,நவராத்திரி,தவிர மாத பவுர்மணி,நவ ராத்திரி,சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய விழாக் காலங்களிலும் வழிபட அனுமதி கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.தேவசம் போர்டு ஆணையாளர் வாசு,உறுப்பினர் சங்கரதாஸ்,குமுளி ஊராட்சித் தலைவி ஷீலா குமார்,தமிழக கண்ணகி அறக்கட்டளை நிர்வாகியும் கம்பம் நேதாஜி ஆதரவற்றோர் இல்லம் நிறுவனருமான பஞ்சுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து