வாஜ்பாய் மரணம் முன்கூட்டியே நடந்ததா?சந்தேகத்தை கிளப்பும் சிவசேனா

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Shiv Sena2018-08-27

மும்பை, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் முன்கூட்டியே நடந்திருக்கலாம் என சிவசேனா திடீர் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். 17-ம் தேதி அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி சேகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள நதிகள், கடலில் கரைக்கபட்டு வருகின்றது.

இந்தநிலையில் வாஜ்பாய் மரணத்தில் சிவசேனா சந்தேகத்தை  கிளப்பியுள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில்,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி தான் இறந்தாரா என்ற சந்தேகம் உள்ளது.  12, 13-ம் தேதிகளிலேயே அவரது உடல்நிலை மோசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மரணம் முன்னதாக நடந்தால் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கும் என்பதால், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட முடியாத சூழல் ஏற்படும். சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றும் வாய்ப்பு நழுவி விடக்கூடாது என்பதற்காகவே வாஜ்பாய் மரண அறிவிப்பு மாற்றப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து