Idhayam Matrimony

கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2026      தமிழகம்
Velankanni 2023-09-06

சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது. தவக்காலத்தின் தொடக்க நிகழ்வான சாம்பல் புதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாகவும், அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக நேற்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் இருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதுடன், விரதம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களில் ஈடுபடுவர்.

இதனையொட்டி, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில் உலகம் அமைதியாக இருக்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பின்னர், கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தை அற்புதராஜ், பரிசுத்தராஜ் உள்ளிட்ட பாதிரியார்கள் சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து