எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் செயல்பட்டு வந்தது. ஓ.பி.எஸ். யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இருப்பினும் எந்தவித முடிவும் எடுக்காமல் இ.பி.எஸ். காலம் தாழ்த்தி வந்தார்.
எந்தவித முடிவும் எடுக்காமல் ஓ.பி.எஸ். காலம் தாழ்த்துவதால் நேற்று பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் புதிய கட்சி உதயமாகிறது எனவும் இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆதரவாளர்கள் அனைவரும் ஒ.பி.எஸ். அணியிலிருந்து ஒட்டு மொத்தமாக விலகுவதாகவும் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகரும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய முக்கிய தலைவர்களுடன் பயணித்தவருமான மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது. ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம். வரும் 23-ம் தேதி காஞ்சிபுரத்தில் கட்சியின் அறிமுக விழா நடைபெறும்” என தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்தது. ஓ.பன்னீர்செல்வத்துடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


