Idhayam Matrimony

ரஷ்யா மீதான பொருளாதார தடையில் இந்தியாவுக்கு விதிவிலக்கு கிடையாது அமெரிக்கா அறிவிப்பு

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, சுமார் ரூ.31,500 கோடி மதிப் பில் 5 எஸ் 400 ரக அதிநவீன ஏவு கணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் எதிரிகளுக்கு பொருளாதார தடை மூலம் பதிலடி கொடுக்கும் சட்டத் தின்  கீழ் ரஷ்யாவுக்கு சமீபத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இவ்விரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவ காரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்குக் காரணம். இதன்படி, ரஷ்யாவுடன் எந்த நாடும் ராணுவ தளவாடங்களை வாங்க முடியாது. எனினும், இந்தியா வுக்கு இதில் விலக்கு வழங்க அமெரிக்கா முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, அமெரிக்காவின் எதிரிகளுக்கு பொருளாதார தடை மூலம் பதிலடி கொடுக்கும் சட்டத் தின்  கீழ் எந்த ஒரு தனி நாட்டுக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

பொருளாதார தடைக்கு வாய்ப்புள்ள ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு தேவையான உதவிகள் செய்வது குறித்தும் ஆலோசித்தோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து