Idhayam Matrimony

வில்லனுக்கு லவ் யூ மெசேஜ் அனுப்பிய பெண் தயாரிப்பாளர்.

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்.. இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர். உத்தமராசா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.. வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தில் ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.இந்தப்படம் வரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த சில புதிய தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் பேசியவற்றில் இருந்து சில சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ உங்கள் பார்வைக்காக..

இந்தப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியபோது, நாயகி வீணா அந்த காட்சியின் சீரியஸ்னெஸ் புரியாமல் அதிக டேக் வாங்கினார்..இதனால் கோபமான இயக்குனர் மதுராஜ் நாயகியின் கன்னத்தில் பளார் என அறைவிட அந்த அதிர்ச்சியுடன், குறிப்பிட்ட அந்த காட்சியில் இயல்பாக நடித்து முடித்தார் வீணா.. இது ஏற்கனவே பரபரப்பை கிளப்பிய செய்தி தான்.. ஆனால் இந்த கோபமெல்லாம் முழுப்படத்தையும் தயாரிப்பாளர் சந்திரா பார்க்கும் வரையில் தான்.. கணவர் ஊரில் இருக்கும்போது இங்கே படத்தை பார்த்த சந்திரா, அதில் தனது கணவரின் நடிப்பை பார்த்துவிட்டு தனது கணவருக்கு 'ஐ லவ் யூ' என மெசேஜ் அனுப்பினாராம். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? தனது காதல் கணவரிடம் இந்த பனிரெண்டு வருடத்தில் ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லியிராத இவரை, கணவரின் நடிப்பு 'லவ் யூ' சொல்லும் அளவுக்கு பிரமிக்க வைத்துவிட்டதாம்.வரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படம் ரிலீசுக்கு பின்னால் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து