எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமராவதி,தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை எட்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திரப்பிரதேசத் தலைநகர் அமராவதியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
100 ரூபாயை எட்டும்:இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பலமே காரணம். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி காரமணமல்ல. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை விரைவில் லிட்டருக்கு 100 ரூபாயை எட்டும். இதேபோல, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக சரிவடையும் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
சிதம்பரம் கருத்து:இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டில் வைக்கும் பொருட்டு, இவற்றை ஜி.எஸ்.டி.-யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் லியுறுத்தியுள்ளார். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாதது இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், அதிக அளவிலான வரி விதிப்பு மூலம் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டினார். எனவே, பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


