பிளாஸ்டிக் இல்லா மதுரை மாநகரை உருவாக்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் ஆணையாளர் அனீஷ் சேகர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      மதுரை
6 mdu pro news

  மதுரை,- மதுரை மாநகராட்சி தமுக்கம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலிருந்து மாநகராட்சி பள்ளியை சேர்ந்த சுமார் 2500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் இல்லா மதுரை மாநகர் விழிப்புணர்வு பேரணியை ஆணையாளர்  .அனீஷ் சேகர்,  கொடியசைத்து துவக்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது:
 தமிழ்நாடு முதலமைச்சர்   அறிவித்தப்படி 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சியின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 25 பள்ளிகளை சார்ந்த சுமார் 2500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மிகப்பெரிய விழிப்புணர்வு பேரணி மூலம் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுப்பது குறித்தும் மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தோ, அபராதம் விதித்தோ பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியாது. பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நமது பூமிக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற செய்தியினை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணியில் மிகப்பெரிய அளவில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பல்வேறு தகவல்கள் அடங்கிய பதாகைகள், பேனர்களுடன் பங்கேற்றனர். அனைத்து பொதுமக்களும் இந்த பிளாஸ்டிக்கை நமது நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு நமது பூமித்தாய்க்கு சேவை செய்வதற்கு பிளாஸ்டிக் இல்லா மதுரை மாநகரை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
முன்னதாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு துணிப்பைகளை ஆணையாளர் அவர்கள் வழங்கினார். பேரணியின்போது ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் வைத்துள்ள பொதுமக்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை வழங்கினார்.
 இந்;த விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானம் முதல் கோகலே சாலை, அழகர்கோவில் சாலை, டாக்டர் அம்பேத்கர் சாலை வழியாக மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையை வந்தடைந்தது.
இந்த பேரணியில் கல்வி அலுவலர் (பொ)  ராஜேந்திரன், உதவி ஆணையாளர்  .பழனிச்சாமி,   உட்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர், மாணவ, மாணவியர்கள், கலந்து கொண்டனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து