எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ம் தேதியன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மானசரோவர் சென்றார். தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கைலாஷ் பயண அனுபவத்தை பதிவிட்டார்.
இந்நிலையில் கைலாஷ் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் செல்லும் சக பயணிகள், ஆர்வத்துடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால் இந்த புகைப்படங்கள் குறித்து பா.ஜ.க.வினர் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் செல்லவில்லை, வெளியிடப்படும் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோஷாப் புகைப்படங்கள் என்று பா.ஜ.க.வினரும் சமூக வலைத்தளத்தில் ஒரு சிலரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.
இதையடுத்து பா.ஜ.க.வுக்கு பதிலடி தரும் வகையில், புதிய புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், கைலாஷ் மலையின் பின்னணியில் ராகுல் காந்தி நிற்பது புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும், அவரது மலையேற்ற விவரங்களையும் குறிப்பிட்டு இருந்தது. 34.31 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 6 மணி நேரத்தில் கடந்ததாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் உடல் எடை குறைந்தது தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


