வைகை அணையில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு.

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      தேனி
20 vaigai news

ஆண்டிபட்டி -    ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் அணையின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து மத்திய அணைகள் பாதுகாப்பு குழு, உலக வங்கி, கேரள மாநில அணைகள் பாதுகாப்பு மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    தேனி மாவட்டம் வைகை அணை 1958 கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களுக்காக அர்பணிக்கப்பட்டது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.கடந்த 60 ஆண்டு காலமாக அணையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும் வளர்ச்சிப் பணிகளுக்காகவும் உலக வங்கி பல கோடி நிதி வழங்கி உள்ளது. மேலும் மத்திய / மாநில அரசுகளும் நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அணையின் கரைப் பகுதியை பலப்படுத்துதல், தண்ணீர் வழிந்தோடும் வாய்க்கால், தார்சாலைகள் ,சட்டர்களின் பழுது நீக்கம், பூங்கா மேம்பாட்டிற்காக மட்டும் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செலவிடப்பட்டுள்ளது.
    இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் சரியாக நடந்துள்ளதா? அணை பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மாத்துார், அனண பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட இயக்குநர் பிரமோத் நாராயணன் தலையைவில் 70 பேர் கொண்ட குமுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அணையின் மேல் தளப் பகுதி, பெரிய மதகுகளின் செயல்பாடு, தண்ணீர் வெளியேறும் பகுதியின் அமைப்பு , சுரங்கப்பாதையில் சென்று , நீர் கசிவு குறித்தும், மின்சாரம் உற்பத்தி செய்யும் பகுதியிலும், அதனைக் தொடர்ந்து பிக் அப் அணையையும் ஆய்வு செய்தார்கள். அப்போது 7 மதகுகள் வழியாக தனித்தனியாக தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் 7 மதகுகளையும் திறந்து விட வேண்டும் என்றும், ஒரே சமயத்தில் கூடுதல் தண்ணீரை திறக்காமல், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வு குறித்து ஆணையத் தலைவர் மாத்தூர் கூறியதாவது, உலக வங்கி மூலமாக பெறப்படும் நிதியிலிருந்து 7 மாநிலங்களில் உள்ள 200 அணைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் இதில் தொழில் நுட்ப பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய பல அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். அதில் ஒரு பகுதிகளாக வைகை அணையில் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்துள்ளோம். வைகை அணையின் செயல்பாடு நன்றாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
   இந்த ஆய்வின் போது அண்ணா பல்கலைகழகம் மற்றும் சென்னை ஐடிஐ தொழில் நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர். ஆய்வுப் பணி ஏற்பாடுகளை கண்காணிப்பு பொறியாளர் நடராசன், வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து