எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அபுதாபி : விரைவாக 200 விக்கெட்டுகள் எடுத்து 82 ஆண்டுகால சாதனையை பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா முறியடித்துள்ளார்.
200 விக்கெட்டுகள்
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 4 ஆம் நாளான நேற்று, நியூசிலாந்து அணியின் வில் சோமர்வில்லேவை ஆட்டமிழக்கச்செய்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 200 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாதனை முறியடிப்பு...
33-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யாஷிர் ஷா, அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 82 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த 1936 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் கிளர்ரே கிரிம்மெட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்து இருந்ததே சாதனையாக இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


