தேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி

share-market 2018 12 11

மும்பை : 5 மாநிலங்களில் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் பாரதீய ஜனதாவுக்கு எதிராகவும் காங்கிரசுக்கு சாதகமாகவும் முடிவுகள் அமைந்தன. இது பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. ஏற்கனவே கருத்து கணிப்புகளில் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லாததை தொடர்ந்து நேற்று முன்தினம் மும்பை பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

நேற்று முன்தினம் சென்செக்ஸ் 714 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இது கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவாகும். நேற்று முன்தினம் 35.673 புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் மந்தமாகவே சென்று இறுதியில் 34.959 புள்ளிகளில் இருந்தது. இதன் மூலம் மும்பை சென்செக்ஸ் நேற்று முன்தினம் 714 புள்ளிகள் சரிந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதிக்கு பிறகு அதிகபட்ச வீழ்ச்சியாகும். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நேற்றும் பங்குசந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண்.  517.97 புள்ளிகள் சரிந்து 34,441.75 ஆகவும், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 205.25 புள்ளிகள் சரிந்து 10,488.45 ஆக வர்த்தகமானது. இதே போல் ரூபாய் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 1.10 காசுகள் சரிந்து ரூ. 72.42 ஆக வர்த்தகமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து