எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு, திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்கச் சிறுகதைகள், திராவிட இயக்கக் கவிதைகள் ஆகிய திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- திராவிடம்’ என்ற சொல் கடந்த இரு நூற்றாண்டு காலமாக மானிடவியல், மொழியியல், வரலாறு, பண்பாட்டு ஆய்வு ஆகிய களங்களில் தெற்காசியாவில் வாழும் ஒரு மக்கள் இனம், மொழிக் குடும்பம், பண்பாட்டுக் குழுமத்தைச் சுட்டிக் காட்டவும், இக்காலத் தமிழ்நாட்டு மக்களிடையே வளர்ச்சி அடைந்து செல்வாக்குச் செலுத்தும் சமுதாய விடுதலை இயக்கத்தின் கருத்துநிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
அறிவுத் துறையில், களஞ்சியம் என்ற சொல் ஒரு பொருள் அல்லது பல பொருள் குறித்து பல அறிஞர்களின் எழுத்துகளைத் தொகுப்பாகக் கொண்டிருக்கும் நோக்கு நூல் படைப்பு எனப் பொருள் கூறப்படுகின்றது. ‘திராவிடக் களஞ்சியம்’ என்பது, திராவிடச் சிந்தனை பற்றிய அறிவுக் களஞ்சியத் தொகுப்பு, திராவிட இயக்க ஆக்கங்களின் தொகுப்பு, திராவிடம் பற்றிய ஆய்வுகளின் தொகுப்பும் ஆகும்.
திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களின் தொகுப்புகளை வெளியிடுதல் அந்த வகையில், 13 திரட்டுகளாகத் திட்டமிட்டுள்ள இப்பணியில் முதற்கட்டமாக, நூலாசிரியர் க. திருநாவுக்கரசின் நீதிக்கட்சி வரலாறு, பதிப்பாசிரியர்கள் - புனிதப் பாண்டியனின் தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, வீ. எம். எஸ். சுபகுணராஜன் அவர்களின் அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, முனைவர் எஸ். ஆனந்தியின் திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு, பேரா. சுப. வீரபாண்டியனின் திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், பேரா. ந. இளங்கோவின் திராவிட இயக்கச் சிறுகதைகள், பேரா. ஹாஜாகனியின் திராவிட இயக்கக் கவிதைகள் ஆகிய 7 தொகுப்புகளை முதல்-அமைச்சர் நேற்று வெளியிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழக வேளாண் பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
17 Feb 2026சென்னை, தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட்டை நேற்று (பிப்.17) சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
-
இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் உருப்படியாக எதுவுமே இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
17 Feb 2026சென்னை, தமிழக அரசிந் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் உருப்படியாக எதுவும் இல்லை என்றும் அத்திப்பழம் போன்று சொத்தையாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைப்பு: தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
17 Feb 2026சென்னை, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம்
17 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என அனைவரும் பாராட்டு: இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
17 Feb 2026சென்னை, மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி வளர்ச்சியில் சாதனை படைத்துள்ளோம் என்றும், தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.



