முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2026      உலகம்
UNO-2023 04 06

ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும், இது உலகளாவிய அமைப்பாக செயல்பட்டிருப்பதாகவும், அனைவருக்கு எதிராகவும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தபட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைதான பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீனுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு கடந்த 2025 நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜன.30 அன்று 35 லட்சப் பக்கங்களைக் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அந்தக் கோப்புகளில் உள்ளவை அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

இதுதொடர்பாக ஆய்வு செய்த ஐ.நா.வின் நிபுணர்கள் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சித்திரவதை, மனிதாபிமானமற்ற வன்கொடுமைகள் போன்றவை சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான குற்றங்களுக்கு கீழ் வருகின்றன. பல குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் சட்ட வரம்புக்குள் வருகின்றன. அனைத்து தகுதிவாய்ந்த தேசிய மற்றும் சர்வதேச நீதிமன்றங்களிலும் இந்த கொடுமைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும்.

இயற்கைக்கு மிகவும் மோசமான இதுபோன்ற குற்றங்கள் இவ்வளவு காலமாக எவ்வாறு நடந்திருக்க முடியும் என்பது குறித்து சுயாதீனமான, பாரபட்சமற்ற முழுமையான விசாரணை தேவை. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்கள், ராஜினாமா செய்வது மட்டும் பொறுப்புக்கூறலுக்கு போதுமானதாக இருக்காது. குற்றவாளிகளுக்கு எதிராக அரசுகள் தீர்க்கமாக செயல்பட வேண்டியது அவசியம். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களோ, சக்திவாய்ந்தவர்களோ யாரும் இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து