முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2026      உலகம்
YouTube 2024-03-27

நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர். நேற்று காலை முதலே, யூடியூப் பக்கத்தின் முகப்புப் பக்கத்தில் சம்திங் வென்ட் ராங் என்று ஆங்கிலத்தில் தகவல் வந்தது. சிலருக்கு யூடியூப் லிங்குகள் வேலை செய்யாமல் இருந்தன.

இது குறித்து ஏராளமான பயனர்கள் புகார் அளித்திருந்த நிலையில் யூடியூப் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது. அதாவது எங்கள் பரிந்துரைகள் அமைப்பில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம். முதலில், யூடியூப் முகப்புப் பக்கத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். படிப்படியாக அனைத்துப் பிரச்னைகளையும் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று விளக்கம் கொடுத்திருந்தது. 

யூடியூப் பக்கம் முடங்கியதுமே, பல பயனர்கள் தங்களது செல்போனில்தான் பிரச்னை என்று நினைத்தனர். ஆனால், பிறகு இது யூடியூப் தொழில்நுட்பக் கோளாறு என்று செய்திகள் வெளியாகின. அப்போது யூடியூப் நிறுவனம் கொடுத்த முதல் பதிவில், யூடியூப் சேவை பெறுவதில் உங்களுக்கு பிரச்னை இருக்கலாம். அவ்வாறு சிக்கல் இருந்தால் நீங்கள் தனியாக இல்லை. எங்களது நிறுவனம் அதனை சரி செய்ய உழைத்து வருகிறது என்று பதிவிட்டிருந்தது.

பிறகு, கொடுத்த விளக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் பரிந்துரைகள் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு யூடியூப் முகப்புப் பக்கம், யூடியூப் செயலி, யூடியூப் மியூசிக், யூடியூப் கிட்ஸ் பக்கங்களில் விடியோக்கள் வருவதை தடுத்துள்ளது. தற்போது முகப்புப் பக்கம் மட்டும் சரி செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிக்கல்களையும் சரி செய்ய எங்கள் குழு தொடர்ந்து வேலை செய்து வருகிறது. விரைவில் பிரச்னை சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து