எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று அதிரடியாக அறிவித்தது. அத்துடன் இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்வதற்கு காலக்கெடு விதித்தது. புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின்னர், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் என படிப்படியாக புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த ரூபாய் நோட்டுக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவங்களில், மாறுபட்ட அளவுகளில் வெளியிடப்பட்டன.
அந்த வரிசையில் தற்போது கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 4.92 பில்லியன் எண்ணிக்கையில் 20 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. மார்ச் 2018-ல் அது இரு மடங்காக உயர்ந்து, 10 பில்லியன் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இது மொத்த கரன்சி எண்ணிக்கையில் 9.8 சதவீதம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தவிர ஏற்கனவே நடைமுறையில் இருந்த மற்ற பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


