எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா -திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி, இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ் - ஜானி ஓமரா இணையை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய போபண்ணா - திவிஜ் சரண் கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 38 வயதான போபண்ணா வென்ற 18-வது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். திவிஜ் சரணுக்கு இது 4-வது பட்டமாக அமைந்தது.
இருவரும் 2018-ம் ஆண்டில் எந்த கோப்பையும் வெல்லாத நிலையில், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி உள்ளனர். போபண்ணா - திவிஜ் சரண் இணைக்கு 250 தரவரிசை புள்ளிகளுடன், ரூ. 20 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபனிலும் இவர்கள் இணைந்து விளையாட உள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), 100-ம் நிலை வீரரான இவா கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். இதில் ஆண்டர்சனுக்கு எல்லா வகையிலும் கார்லோவிச் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் நீயா - நானா என்று பரபரப்புடன் நகர்ந்தது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் இரு செட்டுகளில் இருவரும் தலா ஒன்றை வசப்படுத்தினர். இதே போல் கடைசி செட்டிலும் அனல் பறந்தது.
ஆண்டர்சன் 6-5 என்று முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்திற்குரிய புள்ளியை நெருங்கினார். ஆனால் எதிராளியின் இரண்டு சாம்பியன்ஷிப் புள்ளி வாய்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்ட கார்லோவிச் இந்த செட்டையும் டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். டைபிரேக்கரில் தொடக்கத்தில் கார்லோவிச்சின் (5-2) கை ஓங்கினாலும், அதன் பிறகு ஆண்டர்சன் சுதாரித்துக் கொண்டு மீண்டு வெற்றிக்கனியை பறித்தார்.
இந்த மோதலில் ஆண்டர்சன் 7-6 (4), 6-7 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் கார்லோவிச்சை சாய்த்து பட்டத்தை சொந்தமாக்கினார். இது அவரது 6-வது பட்டமாகும். 39 வயதான கார்லோவிச் இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. வாகை சூடிய ஆண்டர்சனுக்கு ரூ. 62 லட்சமும், 2-வது இடம் பெற்ற கார்லோவிச்சுக்கு ரூ. 33 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


