முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து தரப்பினரும் வளர்ச்சி அடையவே 10 சதவீத இடஒதுக்கீடு - பிரதமர் மோடி விளக்கம்

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

சோலாப்பூர் : அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

நிறைவேறியது...

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.  அந்த மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டதோடு அவையும் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தொடர்ந்து பொய்...

வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால் ஒதுக்கீடு மசோதா குறித்து தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. வாய்ப்புகளில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மசோதாவை நிறைவேற்றுவதற்காக ராஜ்யசபா கூடுதலாக ஒருநாள் கூடியிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பேசி வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து