முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலியில் விபத்து: 3 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 9 பேர் பலி

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

சாண்டிகோ : சிலியில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது லேக் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில், மாபில் மற்றும் வல்டிவா ஆகிய இருநகரங்களையும் இணைக்கும் இருவழிச்சாலையில், பயங்கர விபத்து நடைபெற்றது. ஒரு கார், டிரெய்லர் லாரி, வேன் என மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர். 10 மாத கைக் குழந்தை மற்றும் இரண்டு நபர்களுடன் வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிரெயிலர் லாரி மீது மோதியுள்ளது. கார் மோதியதில், லாரி நிலை தடுமாறி எதிர்திசையில் உள்ள சாலைக்கு சென்று அங்கு வந்த வேனுடன் மோதியுள்ளது. உள்ளூர் நாளிதழ்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து