முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோனியைப் பின்பற்றிய விராட் கோலி - இளம்வீரர் மயங்க் அகர்வால் தகவல்

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனியைப் பின்பற்றியதாக இளம் வீரர் மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.

மவுனமாகவே...

மகேந்திர சிங் டோனி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டனாக பல ஆண்டுகளாக இருந்தார். தற்போது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வருகிறார். எவ்வளவு பெரிய இக்கட்டான நிலையிலும் டோனி களத்தில் மிகவும் மவுனமாகவே இருப்பார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகும், அவர் பெரிய அளவில் ஆரவாரம் செய்ய மாட்டார். அதேநேரத்தில், போட்டி முடிந்தபிறகு, அணியில் இளம் வீரராக இருப்பவர் அல்லது அறிமுக வீரரிடம் வெற்றிக் கோப்பையை கொடுப்பதை டோனி வழக்கமாக வைத்திருந்தார். அவரின் எதார்த்தமான செயலைப் பல்வேறு நேரங்களில் பார்த்திருக்கலாம்.

டோனியை போல்...

டோனியின் அமைதியான மனநிலைக்கு நேர் எதிரானவர் தற்போதையக் கேப்டன் விராட் கோலி. மைதானத்தில் ஆக்ரோசமாக கோலி செயல்படுவார். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டோனியைப் போல், கோலி செயல்பட்டுள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது. பரிசளிப்பு விழாவில் கோப்பையை வாங்கிய விராட் கோலி, அறிமுக வீரர் மயங்க் அகர்வாலிடம் கொடுத்தார்.

மிகப்பெரிய வெற்றி...

இதுகுறித்து மயங்க் அகர்வால் கூறுகையில், “இது மிகப்பெரிய வெற்றி. எனக்கும், அணிக்கும் மிகவும் பெருமையான தருணம். அனைவரும் வெற்றி மேடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கோப்பை வைத்திருக்குமாறு கோலி என்னிடம் கூறினார். ஒரு கிரிக்கெட் வீரருக்கு இது மிகப்பெரிய தருணம்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து