மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா தலைமையில் பெரியகுளத்தில் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனை

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      தேனி
14 theni news

தேனி -தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை ஆவின் பெருந்தலைவர் ஓ.ராஜா தலைமை தாங்கினார். நகர செயலாளர் என்.வி.ராதா, நகர அவைத் தலைவர் கோம்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 30 வார்டுகளிலும் கழக கொடியை ஏற்றவும், பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கவும். நகரின் முக்கிய இடங்களில் அன்னதானம் நடத்தியும், இரத்த தான முகாம் நடத்தியும் வெகு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், விவசாய அணி கண்ணன், ஜெயப்பிரகாஷ், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளா முருகன்,  நகர சார்பு அணி செயலாளர்கள் எம்.ஜிஆர் மன்றம் ராஜவேல், அம்மா பேரவை காஜா முயுனுதீன், சிறுபான்மை பிரிவு தன்ராஜ், மகளிரணி சரஸ்வதி மற்றும் வார்டு செயலாளர்கள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து