காலில் விழுந்த ரசிகரால் மேடையில் தடுமாறி கீழே விழுந்த நடிகர்

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2019      சினிமா
Pawan Kalyan 2019 04 06

விஜயநகரம், ரசிகர் ஒருவர் காலில் விழுந்ததால் மேடையில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார் நடிகர் பவன் கல்யாண்.

விஜயநகரத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகர் பவன் கல்யாண் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மேடையில் நின்று கொண்டிருந்த பவன் கல்யாண் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தார். இதில் நிலை தடுமாறிய பவன் கல்யாண் கிழே விழுந்தார். அப்போது அவருடன் இருந்தவர்கள் அந்த ரசிகரை இழுத்து தாக்க தொடங்கினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், ரசிகரை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து