கடைசி ஓவரில் பந்துவீசுவது ரொம்ப கடினம் - மனம்திறந்த ஸ்ரேயாஸ் கோபால்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      விளையாட்டு
Shresh Gopal 2019 04 17

மொகாலி : கடைசி நேரத்தில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது மொத்த அழுத்தமும் வைக்கப்படுவதாக ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் தெரிவித்துள்ளார்.

ரொம்ப கடினம்...

ஐபிஎல் தொடரின் 32வது போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே பஞ்சாப்பில் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றது. முன்னதாக பந்துவீச்சாளர்களின் நிலை குறித்து பேசியுள்ள ராஜஸ்தான் அணி பவுலர் ஸ்ரேயாஸ், “ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்ற பவுலர்களைவிட வேற்றுமையானவர். அவர் உண்மையில் விரைவாகவும், உலகின் வேகமான பந்துவீச்சாளர்களிலும் ஒருவராவார். மற்ற பவுலர்களும் சிறப்பாக தான் பந்துவீசுகின்றனர். ஆனால் இரண்டு போட்டிகளில் மோசமாக பந்துவீசிவிட்டனர்.

மொத்த அழுத்தம்...

மற்றபடி அவர்கள் நல்ல பவுலர்கள் தான். ஆனால் ஒன்று எந்த ஒரு பவுலரும் பவர் ப்ளே மற்றும் இறுதி ஓவர்களில் பந்துவீசவது என்பது கடினமான ஒன்றாகும். அந்த நேரம் வேகப்பந்துவீச்சாளர்கள் மீது மொத்த அழுத்தமும் வைக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பந்துவீசுவதே இக்காட்டான ஒன்றாகிறது. அந்த ஓவர்களில் 8 அல்லது 9 ரன்கள் கொடுத்தால் கூட அது ஏற்கக்கூடியது தான்” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து