ராமேசுவரம் அருகே இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் கையில் கறுப்புக்கொடி ஏந்தி அமைதிப்பேரணி

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
23 rms news

 ராமேசுவரம்,-ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் அனைத்து சமுதாயத்தினர் சார்பில் அமைதிப்பேரணி,சிறப்பு அஞ்சலி நேற்று நடைபெற்றது.

இலங்கைத் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் சில நாட்களுக்கு முன்பு  ஈஸ்டர் தினதன்று தேவாலயங்கள் உள்பட வாகனங்கள் என   ஒரே சமயத்தில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவங்களில்  இதுவரை 300க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததாகவும், மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும்  தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராமேசுவரம் அருகே அமைந்துள்ள தங்கச்சிமடத்தில் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் நேற்று  அமைதிப்பேரணியும் மற்றும் மெழுகுவத்தி வழிபாடு நடந்தது.  இந்நிகழ்ச்சியில் இங்குள்ள புனித தெரசாள் ஆலயத்தில் இருந்து தொடங்கிய இந்த அமைதிப்பேரணியில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பங்குத் தந்தைகள், மீனவர் சங்கத் தலைவர்கள், வர்த்தகர் சங்கத்தினர் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கைகளில் கறுப்புக்கொடி ஏந்திச்சென்றனர். சுமார் ஒரு கி.மீ தூரம் பேரணியாகச் சென்ற இவர்கள், தங்கச்சிமடம் குழந்தை ஏசு ஆலயத்தில் ஒன்று கூடினர். அங்கு, இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவத்தி ஏற்றி சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து