சபரிமலை கோவில் நடை வரும் 14-ம் தேதி திறப்பு

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      ஆன்மிகம்
sabarimala 29-09-2018

திருவனந்தபுரம், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

15-ம் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 12-ம் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஜூன் மாதம் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 20-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து